தாட்கோ மூலமாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்டம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.... தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கி வருகிறது.
இதன்தொடர்ச்சியாக தற்போது சென்னை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் ஜிஎஸ் எம்பவர் ஸ்கில் (GS EMPOWR SKILL) நிறுவனத்தின் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர்– 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இலரக மோட்டார் வாகன ஓட்டுநராகவும் மற்றும் உதவிகுழாய் பழுது பார்பவர் நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும், 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டு பாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
18 முதல் 45 வரை உள்ள விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான காலஅளவு 14 நாட்கள் ஆகும். மேலும் சென்னை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும். இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் செய்துதரப்படும். எனவே இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com-ன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.