சோனா தொழில்நுட்ப கல்லூரியில் பயிற்சி முகாம்

சோனா தொழில்நுட்ப கல்லூரியில் பயிற்சி முகாம்

 சேலத்தில் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த தொழில்நுட்ப பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

சேலத்தில் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த தொழில்நுட்ப பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சேலம் சோனா ஸ்டார் மற்றும் சோனா தொழில்நுட்ப கல்லூரி இணைந்து "நாளை தொழில்நுட்பம் இன்று" என்ற தலைப்பில் உலகளாவிய தொழில்நுட்ப பயிற்சி முகாமை கல்லூரியில் நடத்தின. இந்த பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பயிற்சி முடித்த 150 மாணவர்கள் மற்றும் 20 பேராசிரியர்களுக்கு சோனா கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா, தொழில்துறை வல்லுனர் ரபின்தரசா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் கார்த்திகேயன், காதர்நவாஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த பயிற்சியை ஒருங்கிணைத்த சோனா ஸ்டார் தொழில் ஆலோசகர் சுரேஷ், திட்ட தலைவர் நாகராஜன், சோனா மெக்கானிக்கல் துறைத்தலைவர் செந்தில் குமார், துணை தலைவர் முரளிதரன், பேராசிரியர் வெங்கடேஷ் ராஜா ஆகியோரை நிர்வாகத்தினர் பாராட்டினர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறும் போது,‘ சோனா கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் மற்றும் சோனா ஸ்டார் முதன்மை அதிகாரி தியாகு வள்ளியப்பா தொடங்கிய 3டி எக்ஸ் என்ற தனித்துவமான ஆராய்ச்சி மையம் மூலம் 6 மாதங்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் தானியங்கி மின்சார வாகனம், டிரோன், ஏ.ஆர்.வி.ஆர். வசதி போன்ற தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி 150 மாணவர்கள் மற்றும் 20 பேராசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மாணவிகளுக்கும் சரி பங்கு வழங்கப்பட்டு உள்ளது. இ்வ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story