விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

கோக்கலை கிராமத்தில், வேளாண்மை துறையின் சார்பில், நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

கோக்கலை கிராமத்தில், வேளாண்மை துறையின் சார்பில், நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

எலச்சிபாளையம் வட்டாரம், வேளாண்மைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின்கீழ், கோக்கலை கிராமத்தில், நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.

எலச்சிபாளையம் அட்மா விவசாய ஆலோசனைக்குழு தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் வட்டார வேளாண்மை அலுவலர் அனிதா தலைமை வகித்து மத்திய மாநில திட்டங்கள், நுண்ணீர் பாசனம், இயற்கை உரங்கள் பயன்பாடு மற்றும் மண், நீர் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றியும் விவசாயிகளுக்கு கூறினார். ஏத்தாபூர் வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் நடராஜன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானாவாரி மற்றும் இறவை நிலக்கடலை பயிரின் விதை நேர்த்தி முறைகள் முதல் அறுவடை தொழில்நுட்பங்கள் வரை பயிர் சாகுபடி முறைகள் மற்றும் ஹெர்போலிவ் என்ற மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தி மயில்கள் அண்டவிடாமல் பயிர்களை பாதுகாப்பது, நிலக்கடலை ரீச் பயிர் வளர்ச்சி ஊக்கியின் பயன்கள் பற்றி விளக்கி கூறினார்.

நீர், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள், பலபயிர் சாகுபடி மற்றும் பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். மேலும், உதவி வேளாண்மை அலுவலர் பூபதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் இடுபொருட்கள், உயிர் உர பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு கூறினார். இப்பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர் கலந்துகொண்டு, அட்மா திட்ட செயல்பாடுகள், உழவர் செயலி பயன்பாடுகள் பற்றி விரிவாக கூறினார். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story