நாமக்கல்லில் புதிய ரேசன் கடை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
ரேசன் கடைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு, பயிற்சி கையேட்டை, நாமக்கல் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அருளரசு வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவு த்துறை ஆள் சேர்ப்பு நிலையத்தின் மூலமாக ரேசன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, கடந்த அக்டோபர் மாதத்தில் பணியில் சேர்ந்த சுமார் 208 ரேசன் கடை விற்பனையாளர்கள் மற்றும் 22 கட்டுனர்களுக்கான பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் ரேசன் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.