செஞ்சி ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் செவிலியர்களுக்கான பயிற்சி முகாம்
செவிலியர்களுக்கான பயிற்சி முகாம்
செஞ்சி ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் செவிலியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது .
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலக சுகாதார அமைப்பின் மூலம் பெண்களுக்கு கர்ப்ப கால பராமரிப்பு குறித்த 3 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிகழ்ச்சிக்கு மாவட்ட தாய், சேய் நல அலுவலர் அம்பிகா தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் யோகாபிரியா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தாளாளரும், வக்கீலுமான ரங்க பூபதி கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கி பேசினார். இந்த முகாமில் உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆராய்ச்சி அதிகாரி லிடியா, திட்ட அலுவலர்கள் சைலேஷ், சுபாவைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு பெண்க ளுக்கு கர்ப்ப கால பராமரிப்பு அளிப்பது குறித்து செவிலியர்களுக்கு பயிற்சி அளித்தனர். மேலும் செவிலியர்களுக்கு கர்ப்ப கால பராமரிப்பு குறித்த கையேடும் வழங்கப்பட்டது. இதில் சத்தியமங்க லம், ஒட்டம்பட்டு, அனந்தபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங் களை சேர்ந்த கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக நர்சிங் கல்லூரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார். முடிவில் சுகாதார ஆய்வாளர் ஏழுமலை நன்றி கூறினார்.
Next Story