விவசாயிகளுக்கான சூரிய ஆற்றல் பயன்பாடு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கான சூரிய ஆற்றல் பயன்பாடு பயிற்சி முகாம்
விவசாயிகளுக்கான முகாம்
கன்னியாகுமரி மாவட்டம், கீழ்மத்திகேடு கிராமத்தில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் சூரிய ஆற்றல் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

குமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் மத்திகேடு கிராமத்தில் விவசாயிகளுக்கு சூரிய ஆற்றல் பயன்பாடு மற்றும் அறுவடைக்கு பின் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் கீழ்குளம் கோபால் தலைமைதாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி ராகிணி வேளாண்மை துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி பேசினார்.

வேளாண்மை உதவி பொறியாளர் சரண்யா சூரிய உணவு பொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பம் சூரிய ஆற்றல் மின் சக்தி மூலம் இயங்கும் மின் மோட்டார்கள் அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சி அளித்தார். உயிர் உரங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை துணை வேளாண்மை அலுவலர் ஜெகன்ஸ் பாபு விளக்கினார். வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து உதவி வேளாண் அலுவலர் விஜய் ஆனந்த் பேசினார். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story