ஓமலூரில் திட, திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் .

ஓமலூரில் திட, திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள அண்ணமார் தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையும், தூய்மை பாரத இயக்கமும் இணைந்து திட மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் உமாநந்தினி கலந்து கொண்டு பேசும்பொழுது தூய்மை காவலர்களான நீங்கள் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் சேரும் குப்பைகளை ஒரே நாளில் அள்ளி சுத்தம் செய்தால் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே உங்களுக்கு நற்பெயர் உண்டாக்குவது மட்டுமல்லாது அந்த இடம் சுகாதாரமாகவும் இருக்க உறுதுணையாக இருக்கும் என்றும் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவ பிரபு, மண்டல துணை வட்ட வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், மதலைமேரி, முரளிகிருஷ்ணன், அண்ணாமலை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் ஊக்குநர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story