கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா

கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா

கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா

அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமான தளத்தில் கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமான தளமான ஐ.என்.எஸ். ராஜாளியில் உள்ள ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான 102-வது பயிற்சி நடந்தது.

இதன் நிறைவு விழா ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தள கமாடோர் கபில் மேத்தா மற்றும் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி கமாண்டர் அர்ச்சேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வராஜேஷ் பெந்தர்கர் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்திய கடற்படையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில் முதல் பெண் கடற்படை ஹெலிகாப்டர் பைலட்டாக சப்-லெப்டினட் அனாமிகா பி ராஜீவ் பயிற்சியை நிறைவு செய்தார். மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தில் இருந்து லெப்டினன்ட் ஜாம்யாங் செவாங் உள்பட 21 பேர் கடற்படை ஹெலிகாப்டர் பைலட்டுக்கான 22 வார பயிற்சி முடித்து ஹெலிகாப்டர் பைலட்டாக பட்டம் பெற்றனர்.

நிகழ்ச்சியில் 21 கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கு கோல்டன் விங்ஸ் மற்றும் சான்றிதழ்களையும், பயிற்சியில் முதலிடம் பிடித்த விமானிக்கான ‘பிளாக் ஆபிசர் கமாண்டிங்-இன்-சீப்’ விருது லெப்டினன்ட் குர்கிர்த் ரஜபுத்கும், தகுதி வரிசையில் முதலிடம் பிடித்த சப்- லெப்டினன்ட் நிதின் ஷரன் சதுர்வேதிக்கு சப்- லெப்டினன்ட் குண்டே நினைவு புத்தகப் பரிசும் பெற்றனர்.

Tags

Next Story