சேலத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழா
நிறைவு விழாவில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மாநகர காவல்துறையில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 41 பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வான 41 பேருக்கும் கடந்த 45 நாட்களாக அன்னதானப்பட்டியில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இந்த பயிற்சியின்நிறைவு விழா இன்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி கலந்து கொண்டு புதிய ஊர்க்காவல்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், காவல்துறையின் ஒரு அங்கமாக விளங்கும் காவல்துறையினருக்கான பணி தான்.
அதனால் ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சீரமைப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். பணியின்போது தவறுக்கு இடம் அளிக்காத வகையில் பணியாற்றிட வேண்டும், என்றார்.
பின்னர் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை கமிஷனர் வழங்கினார். இதில் துணை கமிஷனர்கள் பிருந்தா, ராஜேந்திரன், கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு, ஊர்க்காவல்படை மண்டல தளபதி பாலசுப்பிரமணியன், மண்டல துணை தளபதி ரெனால்ட் பெஞ்சமின்உள்பட பலர் கலந்து கொண்டனர்.