ஊத்தங்கரையில் வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
ஊத்தங்கரையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ளதை தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை நேர பயிற்சியில் 690 பயிற்சியாளர்களும் மாலை வகுப்பாக 650 ஆசிரியர்கள் பயிற்சியில் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பயிற்சியில் தேர்தல் நேரங்களில் கையாளக்கூடிய பணிகள் குறித்து மாதிரி பெட்டிகளை வைத்து பயிற்சி வழங்கப்பட்டது தேர்தல் வாக்கு பெட்டிகளில் ஏற்படும் கோளாறுகளை எப்படி சரி செய்வது,
ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் வாக்கு சாவடி அலுவலர்கள் கையாளக்கூடிய பணிகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது திடீரென ஏற்படும் கோளாறுகளை சரி செய்யவும் மேலும் அது தொடர்பான பொறியாளர்களுக்கு தொடர்பு கொண்டு சரி செய்ய எப்படி முயற்சிகளை மேற்கொள்வது என்ற பயிற்சிகளை வழங்கப்பட்டு வருகிறது அதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சரயு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.