தபால் வாக்கு பெறும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தபால் வாக்குகளை பெறும் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, தருமபுரி மக்களவை தொகுதியில தபால் வாக்கு பெறும் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர். உதவி வாக்குச்சாவடி அலுவலர், நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி. இ.ஆ.ப., தலைமையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்ததாவது: பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் 04.04.2024 முதல் 06.04.2024 வரை தபால் வாக்கு பெறும் பணி நடைபெறுகிறது. அதன்படி தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தபால் ஓட்டுப் பெறத் தகுதியான 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் வாக்காளர்களிடம் அளிக்கப்பட்டு தபால் மூலம் வாக்களிக்க விருப்பம்தெரிவத்த வாக்காளர்களின் ஒப்புதல் பெற்றுபூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம் 12- பெறப்பட்டதின் அடிப்படையில் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு அவ்வாக்காளர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படவுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில், 1897 வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்பிரிவிலும் 1228 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகள் பிரிவிலும் மொத்தம் 3125 வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்காளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர், உதவி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர். நுண் பார்வையாளர் ஒருவர். காவல்துறை அலுவலர் ஒருவர் மற்றும் வீடியோர்கிராபர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு மேற்கண்ட வாக்காளர்களின் வசிப்பிடத்திற்குச் சென்று தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த வாக்காளரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிவித்து அவர்கள் வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார். வாக்குப்பதிவு அலுவலர் குழு செல்லுமுன், குழு செல்ல இருக்கும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களைவாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக முன்கூட்டியே தெரிவிப்பார்கள். அவ்வாறு தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, மேற்படி வாக்களிப்பதை பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 -ல் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் நேரில் பார்வையிடலாம்.இப்பணிக்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியில் மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை வரும் 04.04.2024 முதல் 06.04.2024 வரை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் காலை மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்கு வழங்குதல் மற்றும் பெறும் பணியை மேற்கொள்வர். வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்செல்லும்போது போதிய காவல்துறை பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் (Micro observer) செல்வர். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும், ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் காணொளி பதிவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு செய்ய வரும் குழுவின் வருகையின்போது வாக்காளர் வீட்டில் இல்லையெனில், முன்கூட்டியே தகவல் அளித்து இரண்டாவது முறையும் வாக்காளரின் வீட்டிற்க்கு செல்வார்கள். அதிகாரிகளது இரண்டாவது வருகையின்போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில் மீண்டும் குழுவானது வருகை தரமாட்டார்கள். தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து படிவம் 12-D வழங்கிய மேற்கண்ட வாக்காளர்கள், இந்த வாய்ப்பின் போது வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டாலும், மீண்டும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கவும் அனுமதிக்கப்படமாட்டார்கள். தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு. வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு செய்யும் வழிமுறைகளை தெளிவுபடுத்துவார்கள்.வாக்காளர்களால் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு, கையொப்பமிடப்பட்டு.

வாக்குப்பதிவு அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட உறுதியளிக்கும் படிவமான 13A படிவத்துடன்.வாக்கு பதிவு செய்யப்பட்ட வாக்குச் சீட்டை கடித உறை (படிவம் 13B) யினுள் வைத்து, ஒட்டி அதனை பெரிய கடித உறையான (படிவம் 13C) யினுள் வைத்து, ஒட்டி அக்குழுவிடம் வாக்காளர்கள் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர்கள், எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் ஆட்படாமல் சுயமாக அவர்களது தேர்விற்குரிய வேட்பாளர்களுக்கு வாக்களித்தார்கள் என்பதை தபால் வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள். மேலும் மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளும் அக்குழுவில் இடம்பெறும் வீடியோகிராபர் மூலம் ஒளிப்பதிவு செய்யப்படும். இக்குழுக்கள் மேற்கொள்ளும் பணியினை பார்வையிட வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட அவரது முகவர்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு முகவரின் விபரங்களுடன் மனு செய்து அனுமதி பெறலாம். பார்வையிட செல்லும் வேட்பாளர் அல்லது அவரது முகவர்கள் வாக்காளரிடம் வாக்கு கோரி பிரசாரம் ஏதும் செய்யக்கூடாது என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்த உங்களது முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காயத்ரி, வில்சன் ராஜசேகர். தனப்பிரியா, நர்மதா, ஷெர்லி ஏஞ்சலா மற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், உதவி வாக்குச்சாவடி அலுவலர், நுண் பார்வையாளர்கள்கலந்துகொண்டனர்

Tags

Next Story