மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு

பரமத்தி வேலூரில் மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

பரமத்தி வேலூரில் கோட்ட அளவிலான மின்வாரியத்தில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்களுக்கான சோம நல பாதுகாப்பு வகுப்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்சிக்கு வேலூர் மின் வாரிய கோட்ட பொறியாளர் வரதராஜன் தலைமை வகித்தார். இந்த பயிற்சி வகுப்பில் ஊழியர்களுக்கான பாதுகாப்பான அம்சங்கள் குறித்து மேட்டூர் தொழில்நுட்ப பயிற்சி வகுப்பின் உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி கலந்துகொண்டு மின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பில் வேலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர்கள் மூர்த்தி, ராஜா, ஜெகதீசன், மாலதி‌ ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story