விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி    

விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி     

விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி

நாமக்கலில் விவசாய மேம்பாட்டுக் குழு பயிற்சிக்கு வருகைபுரிந்த விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்தும் பதிவேற்றம் செய்தனர்.

நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நாமக்கல் அடுத்த, கீரம்பூரில் ‘கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி’’ வழங்கப்பட்டது. நாமக்கல் உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் கோவிந்தசாமி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது என பயிற்சி வழங்கினார்.

மேலும் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, முக்கிய திட்டங்களில் உள்ள இடைவெளியினை குறைக்கும் வகையில் விவசாயிகளின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் அவர்களின் வருமானத்தை உயர்த்திடவும் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய “மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்” கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப் படுகின்றது என்று விளக்கமளித்து பயிற்சி வழங்கினர். சிறப்பு பயிற்றுநர் துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு) மாதேஸ்வரன், வேளாண்மை அலுவலர் ரகசிகபிரியா ஆகியோர் காரிப் பருவத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் நிலக்கடலையில் ஏற்படும் வேர் அழுகல் நோய் மற்றும் மக்காசோளப்பயிரில் ஏற்படும் படைப்புழு தாக்குதல் மற்றும் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்து பயிற்சி வழங்கினர்.

உதவி வேளாண்மை அலுவலர் மாலதி. துறை சார்ந்த மானியத் திட்டங்களை எடுத்துக் கூறினார். அட்மா வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் சாந்தக்குமார் அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் இக்குழுவின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். இரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள். கவிசங்கர் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்தும் பதிவேற்றம் செய்தும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story