கள்ளக்குறிச்சியில் கால்நடை உரிமையாளர்களுக்கு பயிற்சி

கள்ளக்குறிச்சியில் கால்நடை உரிமையாளர்களுக்கு பயிற்சி


கள்ளக்குறிச்சியில் கால்நடை உரிமையாளர்களுக்கு துாய பால் உற்பத்தி குறித்த பயிற்சி நேற்று நடந்தது.


கள்ளக்குறிச்சியில் கால்நடை உரிமையாளர்களுக்கு துாய பால் உற்பத்தி குறித்த பயிற்சி நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சியில் கால்நடை உரிமையாளர்களுக்கு துாய பால் உற்பத்தி குறித்த பயிற்சி நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பால் வளத்துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சார்பில் நடந்த பயிற்சிக்கு, கள்ளக்குறிச்சி ஆவின் உதவி பொதுமேலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

பயிற்சியில், கறவை மாடு வளர்ப்பு, நிரந்தர மற்றும் தரமான பால் உற்பத்தி, துாய பால் உற்பத்திக்கான வழிமுறை ஆகியவை குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும், மாடுகளுக்கு மடுவீக்கம் நோய் வராமல் தடுக்க கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து குறித்து எடுத்துரைக்கப்பட்டு, கால்நடை உரிமையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

Tags

Next Story