வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி!

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி!

வாக்கு எண்ணும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.


வாக்கு எண்ணும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

கோவை-பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி என்னப்படுகிறது. இதில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வாக்குகள் எண்ணும் அலுவலகர்களுக்கான பயிற்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் இன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்,துணை ஆணையர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள 344 பேர் பங்கேற்றனர்.அவர்களிடம் பேசிய ஆட்சியர் கூறுகையில் வாக்கு என்னும் மையத்திற்கு காலை 6 மணிக்கு வந்து விட வேண்டும் என்றும் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணபட்ட பின்னர் 8:30 மணிக்கு வாக்கு இயந்திரங்கள் உள்ள வாக்குகள் எனப்பட வேண்டும் என்றார்.

முதல் இரண்டு சுற்றுகள் கூடுதல் நேரம் எடுத்தாலும் அடுத்த சுற்று வாக்குகள் வேகமாக சென்றுவிடும் என்றவர் முதல் சுற்றுகளில் கவனம் தேவை எனவும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் உதவி செய்ய அலுவலர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்தார். விதிமுறைகளை சரியாக படித்து பயிற்சியின் போது தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்,முகவர் வேட்பாளர் வாக்குகள் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை சரியாக எழுதி காண்பிக்க வேண்டும் எனவும் வாக்கு மையத்திற்கு செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றவர் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் சரியாக நடைமுறைபடுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story