மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்து பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்து பயிற்சி
 உறுதி மொழி எடுத்துக்கொண்ட அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள்
அரியலூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்து பயிற்சி நடைபெற்றது

மக்களவைத் தேர்தலில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்து புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியைத் தொடர்ந்து 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இப்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் திருமானூர் ஊராட்சி மற்றும் ஜெயங்கொணடம் நகராட்சி அலுவலகங்கள் சார்பில் 100 சதவீதம் வாக்காளிப்பது குறித்து மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story