புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் விவசாயிகளுக்கு பயிற்சி!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதிணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2023-24 சிறுதானியங்கள் விவசாயிகள் குழு என்ற தலைப்பில் விவசாயிகள் காண பயிற்சி விராலிமலை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் நடைபெற்றது.
வேளாண் துறை இயக்குனர் (ஒன்றிய அரசு திட்டம்) ஆ. ஆதிசாமி தலைமை வகித்து பேசும்போது சிறு தானியங்கள் குறித்தும் வேளாண் துறையில் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கினார். விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் மணிகண்டன் மண் மற்றும் நீர் பரிசோதனையின் அவசியம் மண்வள மேம்பாடு அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
Next Story