வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி
திருவெறும்பூர் அருகே அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் இடுபொருட்கள் தயாரிப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவெறும்பூர் அருகே அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் இடுபொருட்கள் தயாரிப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவெறும்பூர் வட்டார வேளாண்மை துறையின் மூலம் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் எலந்தப்பட்டி கிராம விவசாயிகளுக்கு நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி வகுப்பில் இயற்கை வேளாண்மை மற்றும் இடுபொருட்கள் தயாரிப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. திருவெறும்பூர் வேளாண்மை உதவி இயக் குனர் சுகன்யா தேவி தலைமை தாங்கி, துறை சார்ந்த திட் டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். அங்கக வேளாண்மையில் முன்னோடி விவசாயியாக செயல்படும் செந்தில்குமார் பஞ்சகாவியா, மீன் அமிலம், புண்ணாக்கு கரைசல், கன ஜீவாமிர்தம், மூலிகை பூச்சி விரட்டி பஞ்சகாவியா விளக்கு, போன்ற இயற்கை இடுபொருள்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் பற்றி எடுத்துக் கூறிதேமோர் கரைசல் முட்டை கரைசல், பூச்சி விரட்டி செயல் விளக்கம் செய்து காண்பித் தார். இந்த பயிற்சியில் எலந்தபட்டி கிராமத்தைச் சேர்ந்த ல் எலந்தபட்டி கி விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபாதேவி வரவேற்றார். பயிற்சிக் கான ஏற்பாடுகளை உதவி தொழிநுட்ப மேலாளர் சிந்தியா செய்திருந்தார்.
Next Story