விவசாயிகளுக்கு காரிப் பருவ பயிர் தொடர்பான பயிற்சி

விவசாயிகளுக்கு காரிப் பருவ பயிர் தொடர்பான பயிற்சி

பயிற்சி வகுப்பு 

பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு காரிப் பருவ பயிர் தொடர்பான சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

பரமத்தி வட்டாரத்தில் சித்தம் பூண்டி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் மூலம் கிராம அளவிலான விவசாயிகள் முன்னேற்ற குழுவிற்கு காரிப் பருவ பயிர்கள் தொடர்பான பயிற்சி நடத்தப்பட்டது. இப்ப பயிற்சியில் வேளாண்மை அலுவலர் மோகனப்பிரியா, தலைமை வகித்து, வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், சிறுதானிய இயக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம், நுண்ணீர் பாசன திட்டம், பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதி திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் அடுக்குத்திட்டத்தில் விவசாயிகள் விபரங்கள் பதிவேற்றம் செய்வதன் அவசியம் பற்றியும் விளக்கமாக பேசினார்.

மாதேஸ்வரன் முன்னிலை வகித்து, மண் மாதிரி எடுப்பதன் முக்கியத்துவம் பற்றியும், விதைகள் தேர்வு செய்வது பற்றியும், விதை நேர்த்தி செய்து விதைகளை விதைப்பது பற்றியும், பயிர்களுக்கு இயற்கை உரம் இடுவது, நுண்ணூட்ட உரங்களை இடுவது பற்றியும் அவற்றின் முக்கியத்துவங்கள் பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் சரவணன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படும் இடுபொருள்கள் குறித்தும் அவற்றைப் பெறுவதற்கு முன்பதிவு செய்வது பற்றியும் உழவன் செயலியில் முன்பதிவு செய்வது பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறினார். மேலும் அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி நன்றியுரை வழங்கினார். மேலும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரவீனா, ஜோதிமணி, ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story