செவிலியர்களுக்கு பயிற்சி வகுப்பு
செவிலியர்களுக்கு பயிற்சி
அரியலூர் மாவட்டம் கடுகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்பு, இறப்பு பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் வலைதள பதிவு புத்தாக்க பயிற்சி இன்று நடைப்பெற்றது வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்களிடம் தெளிவான முகவரி மற்றும் தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிழையின்றி பெற்று, அவற்றை படிவம் மற்றும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கபட்டது.
மேலும் பொதுமக்கள் தாங்களாகவே வலைதளத்தில் பிறப்பு சான்றிதழை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பொதுமக்களுக்கு தெரியபடுத்துமாறு செவிலியர்களுக்கு அறிவுறுத்தபட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், பிறப்பு, இறப்பு பதிவாளர் மணி மற்றும் அரியலூர் வட்டாரத்தில் உள்ள 08 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.