வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி 

வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி 

வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, மண்டல அலுவலர்களால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியானது நேற்று நடந்தது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு ஆசாரிப்பள்ளம் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு நாகர்கோவில், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு சுங்கான்கடை, செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரியிலும், பத்னாபபுரம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு திருவட்டார், எக்ஸ்சல் சென்ரல் பள்ளியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு மார்த்தாண்டம், நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரியிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்த மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உதவி அலுவலர்கள் எஸ்.காளீஸ்வரி அலுவலர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story