கெங்கவல்லியில் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி
பைல் படம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி நாடாளுமன்ற தேர்தலையொட்டி கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட வாக்காளர்களில், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி கள் ஆகியோர்கள், வீடுகளிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில், 12டி படிவம் விநியோகம் செய்வது குறித்து நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கணேஷ் தலைமை வகித்தார். கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் 85 வயது மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி கள் 4,730 வாக்காளர் உள்ள னர். அவர்களை நேரில் சந்தித்து 12டி விண்ணப்பத்தை வழங்கி, வாக்களிக்க உதவிகள் செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவ லர் வெங்கடேசன், தேர்தல் அலுவலர் பரசுராமன், ஈஸ்வரி மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கல்யாண மண்டபம், அச்சகம், நகை அடகுகடை, வட்டிக்கடை மற்றும் தங்கும் விடுதியை சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதி முறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் நடந்தது