தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி

தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி

பயிற்சி முகாம்

தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பயானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மொத்தம் உள்ள 2222 வாக்குச்சாவடி மையங்களில் 2666 முதன்மை அலுவலர்களும், 2666 முதல் நிலை அலுவலர்களும், 2666 இரண்டாம் நிலை அலுவலர்களும், 2666 மூன்றாம் நிலை அலுவலர்களும், 306 நான்காம் நிலை அலுவலர்களும் என மொத்தம் 10,970 அலுவலர்கள் தேர்தல் பணியினை மேற்கொள்ளவுள்ளனர். இதில், 2222 வாக்குச்சாவடிகளில், 255 வாக்குச்சாவடிகள் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளவை ஆகும். இவர்களுக்கு சத்தியமங்கலம் , கோபிசெட்டிபாளையம் , அந்தியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் மாதிரி வாக்குப்பதிவு பையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாலும் முறை மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story