ராமநாதபுரம் விவசாயிகளுக்கு பயிற்சி !

ராமநாதபுரம் விவசாயிகளுக்கு பயிற்சி !

 விவசாயிகளுக்கு பயிற்சி

உச்சிப்புளியில் வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வேதாளை கிராமத்தில் வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் 2023-24 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்பட்டு ராபி பருவ விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி அரசு வழங்கும் மானிய பொருட்கள் மற்றும் வேளாண்மைத்துறை திட்டங்கள், கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைத்ததன் நோக்கம், அதன் பணி, அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள்,குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் உழவன் செயலி பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார். இப்பயிற்சியில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story