கிராம வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி

கிராம வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி
பயிற்சி
நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சியில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சியில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி திருமருகல் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவிற்கான பயிற்சி உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடி கிராமத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி தலைமை தாங்கினார்.திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், அனைத்து திட்ட செயல்பாடுகளின் தொழில்நுட்பங்கள் மற்றும் பண்ணைக்கருவிகள் முக்கியத்துவம் மற்றும் உயிர் உரங்கள், இடுபொருட்கள், விதை இருப்பு,பண்ணைக்கருவிகள், உழவன் செயலியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

Tags

Next Story