பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் கற்பிப்போம் திட்டத்தில் பயிற்சி

திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக பெண் குழந்தைகளை காப்போம்; கற்பிப்போம் திட்டத்தின் நோக்கு நிலை பயிற்சி வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் மகளிர் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை சார்பாக பெண் குழந்தைகளை காப்போம் ,பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்தின் நோக்கு நிலை மற்றும் உணர் திறன் பயிற்சி வகுப்பு வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் 2 நாள் நடந்தது.

இந்த பயிற்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை தலைமை தாங்கினார். இந்த திட்டத்தின் பெண் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவும் ,பெண் சிசு கருவை அழித்தல் சட்டப்படி தவறு ,குழந்தை திருமணம் தடுத்தல் ,குழந்தை மகளிர் துன்புறுத்துதல் தடுத்தல் ,பெண் கல்வியை ஊக்கப்படுத்துதல், பள்ளிகளின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர் குறித்தும் ஆசிரியர் பாவலர் சு. வேலாயுதம் பயிற்சி வழங்கினார்.

பெண் அதிகாரம் பெறுதல் போன்ற கருத்துக்களை சமுதாயத்தில் எடுத்துக் கொள்ள பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் பாலியல் வன் தொடர்பான பற்றிய விழிப்புணர்வும், பாலியல் சம்பந்தமான சட்டபூர்வ நடவடிக்கைகளை எவ்வாறு கையாள்வது மேலும் காவல்துறையில் பாதிக்கப்பட்ட நபர்கள் எவ்வாறு அணுகுவது இந்த அமைப்பு மூலம் எல்லா நிலையிலும் என் அனைத்து துறையிலும் எவ்வாறு செயல்பட்டு கொண்டு இருக்கிறது தீர்வுகளும் ஆதரவும் கருத்துக்கள் தெளிவாகவும் எடுத்துரைக்கப்பட்டது. பெற்றோர்கள் சகோதர சகோதரி உறவினிலும் பாளையில் வன்கொடுமை சம்பந்தமான விஷயங்களை புரிந்துணர்வு பற்றிய தகவல்களும் அதற்கான ஆதாரங்களும் விளக்கமாக எடுத்து வைக்கப்பட்டது.

பயிற்சியை அண்ணா பல்கலைக்கழக அலுவலர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது இந்த பயிற்சியில் ஊடக பத்திரிகையாளர்கள், வளர்ச்சி வட்டார அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், விளையாட்டுத் துறை சார்ந்த பணியாளர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள், மருத்துவ துறையைச் சார்ந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக நலத்துறை சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு துறையைச் சார்ந்தவர்கள், இந்த பயிற்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சி முடிவில் ஒருங்கிணைந்த மைய நிர்வாகி எலிசபெத் ராணி நன்றி கூறினார்.

Tags

Next Story