நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி - நவ.3 துவக்கம்

நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி - நவ.3 துவக்கம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் 

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில் விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில், செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் விஞ்ஞான முறையில் நாட்டு கோழி வளர்ப்பு முறைகள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, கோழிகளுக்கான தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, கோழிக்குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், 9385307022 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் வந்தோ தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு பயிற்சியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story