தூய்மை காவலர்களுக்கு மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

தூய்மை காவலர்களுக்கு மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

மரக்காணம் தூய்மை காவலர்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பது குறித்த பயிற்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது.


மரக்காணம் தூய்மை காவலர்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பது குறித்த பயிற்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பது தொடர்பான பயிற்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ் ஜெய்நாராயணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், தூய்மை காவலர்களை கொண்டு ஒவ்வொரு வீடுகளிலும் சேகரம் செய்யப்படும் குப்பைகளை குப்பை பிரிக்கும் தளத்திற்கு எடுத்துச்சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட வேண்டும். தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகள் சமுதாய உரக்குழியில் நிரப்பப்பட வேண்டும், பின்னர் கழிவு சிதைப்பான் தெளிப்பதன் மூலம் குப்பைகளை மக்கச்செய்ய வேண்டும்.

அதன் பிறகு 15 நாட்கள் கழித்து உரமாக மாறியவற்றை மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டியில் நிரப்ப வேண்டும். இவ்வாறு நிரப்பப்பட்ட உரத்தை மண் புழுக்கள் உணவாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து வரும் கழிவுகள் மண்புழு உரமாக மாற்றம் அடைவதாக தூய்மை காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மரக்காணத்திலிருந்து இயற்கை விவசாயி சீதாராமன் கலந்து கொண்டு பயிற்சியை வழங்கினார்.

Tags

Next Story