தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம்
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் - 2024 யினை முன்னிட்டு தேர்தல் பணிகளுக்கான ஒவ்வொரு பொருள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கற்பகம், தலைமையில் பிப்ரவரி 19ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பணிகள், வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணும் மையங்கள், வாக்குப்பதிவிற்கான பொருட்களை பெறுதல் என ஒவ்வொரு பணிக்கும் ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஒருங்கிணைப்பு அலுவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து ஒவ்வொரு அலுவலருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். மாவட்ட அளவிலான தேர்தல் பயிற்றுனர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி அளவிலான பயிற்றுனர்களுக்கு அனைவருக்கும் மாநில அளவிலான தேர்தல் பயிற்றுனர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபால கங்காதரனால் அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் கோகுல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, நியமன அலுவலர்கள் மாவட்ட அளவிலான தேர்தல் பயிற்றுனர்கள், சட்டமன்ற தொகுதி அளவிலான பயிற்றுனர்கள், வருவாய் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.