வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் ,தென்னம்பாடியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்றனர்.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை வேலாண்மை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கிராமங்களில் முகாமிட்டு அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன்படி விராலிமலை அருகே தென்னம்பாடி யில் உள்ள பாண்டியன் என்ற விவசாயியிடம் மீன் வளர்ப்பு பற்றியும், பல்வேறு வகையான மீன்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் சந்தைப் படுத்துதல் பற்றியும் கற்றறிந்தனர். பயிற்சியில் மாணவர்கள், தென்னம்பாடி ஊராட்சி துணைத்தலைவர் முத்துக்கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டார். மேலும் அப்பகுதி விவசாயிகளின் வேளாண் சார்ந்த தொழில்களையும் பயின்று வருகின்றனர்.

Tags

Next Story