வெம்பாக்கம் வட்டாரத்தில் உழவர் விவாத குழு அமைப்பாளர்களுக்கான பயிற்சி

வெம்பாக்கம் வட்டாரத்தில் உழவர் விவாத குழு அமைப்பாளர்களுக்கான பயிற்சி

பயிற்சி முகாம் 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உழவர் விவாத குழு அமைப்பாளர்களுக்கான பயிற்சி திருவண்ணாமலை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் நடைபெற்றது. பயிற்சிக்கு வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ம. சண்முகம் தலைமை தாங்கினார்.திருவண்ணாமலை மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் சௌந்தர் வருகை புரிந்து விவாத குழு அமைப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.விவாத குழு உறுப்பினர்களுக்கு விதை தேர்வு, விதை கடினப்படுத்துதல், கரு விதை ,ஆதார விதை ஆகியவற்றின் பயன்பாடுகள் பற்றியும் பயிர் சாகுபடியில் இருந்து அறுவடை செய்தல் வரை உள்ள தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார்.

வேளாண்மை உதவி இயக்குனர் ம.சண்முகம் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மானியங்கள் பற்றி விவாத குழு உறுப்பினர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.வெம்பாக்கம் வேளாண்மை விரிவாக்க வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இப்ப பயிற்சியில் விவசாயிகளுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் மானிய திட்டங்கள் வேளாண் இடுபொருட்கள் வேளாண் இடுபொருட்களை பயன்படுத்தும் முறை உயிர் உரங்கள் பயன்பாடு திரவ உயிர் உரம் பயன்படுத்தும் முறை மற்றும் விவாத குழு நடவடிக்கைகள் நடைமுறைகள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் குழுக்களுக்கான செயல்பாடுகள் அவற்றை மேம்படுத்தும் முறை ஆகியவற்றைப் பற்றி பதில் அளிக்கப்பட்டது.இப்பயிற்சியில் 10 விவாத குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story