வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

பானையங்கால் ஊராட்சியில் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
தியாகதுருகத்திற்கு அருகே பானையங்கால் ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கி உழவன் செயலி மற்றும் தமிழ் மண்வளம் தளம் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு வரவேற்றார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளுக்கு இடையில் பணம் நிறுத்தப்பட்டிருந்தால் அந்த விவசாயி மீண்டும் உதவி தொகை பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

Tags

Next Story