தேன் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி !

தேன் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி !

பயிற்சி

நத்தம் அருகே பண்ணியாமலையில் தேன் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பண்ணியாமலையில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுவரும் விவசாயி குணசேகரன் என்பவர் நடத்தி வரும் தேனீ வளர்ப்பு மையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் நத்தம் தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நத்தம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கணேசன் தலைமையில் கலந்து கொண்டனர். பயிற்சியில் தேன் ஈ உற்பத்தி செய்வது, தேன் எடுப்பது, தேனடையை பிரேமில் கட்டுவது, தேனீ கூட்டத்தை பராமரிப்பது, இராணித் தேனீ உற்பத்தி செய்வது, தேன் மெழுகு உற்பத்தி செய்வது உள்ளிட்ட தேனீ வளர்ப்பது குறித்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

Tags

Next Story