நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரியில் நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த, எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளியில் நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் கருப்பையா தலைமை வகித்து, நெல் சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய உற்பத்தி தொழில் நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கமளித்தார்.

இப்பயிற்சியில், துணை வேளாண்மை அலுவலர் சரவணன், திருத்திய நெல் சாகுபடியில் கோனோ வீடர்கொண்டு களை எடுக்கும் தொழில் நுட்பம் குறித்து விளக்கினார். உதவி விதை அலுவலர் புனிதராஜ் நெல், நிலக்கடலை விதை பண்ணை அமைப்பதன் பயன்கள் குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் முனிராஜ் பயிர் காப்பீட்டு செய்தல், மானிய திட்டம், இடுபொருள் விநியோகம், பயிர்கடன் அட்டை பெற விண்ணப்பிப்பது பற்றியும், அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் விளக்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார் அட்மா திட்டப்பணிகள் குறித்து விளக்கினார். இப்பயிற்சியில் 25 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story