பாரம்பரிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

பாரம்பரிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

  சேதுபாவாசத்திரம் வட்டாரத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  

சேதுபாவாசத்திரம் வட்டாரத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் பள்ளத்தூர், சொக்கநாதபுரம் மற்றும் கட்டையங்காடு உக்கடை கிராமத்தில், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு 20 எக்டேர் பரப்பளவிற்கு, இத்திட்டம் மேற்கொள்வதற்காக 26 விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுவாக ஏற்படுத்தி குழுவின் பதிவு அதன் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ஜி.சாந்தி தலைமை வகித்து, மீன் அமிலம், ஜீவாமிர்தம், பஞ்ச காவ்யா, அமிர்த கரைசல் ஆகியவை தயாரிக்கும் முறைகள் பற்றி எடுத்துக் கூறினார். பேராவூரணி விதைச்சான்று அலுவலர் வெங்கடாசலம் பேசுகையில், "இத்திட்டத்தில் இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் பயிர்சாகுபடி செய்திட வேண்டும். விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை மூலமாக பதிவு செய்யும் முறை, மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து மண் மற்றும் நீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதனடிப்படையில் அங்கக சத்துகள் மற்றும் இரசாயன பூச்சிக்கொல்லி கழிவுகள் இருப்பதை அறிந்து சாகுபடி செய்ய வேண்டும். இதற்கான பதிவேடுகள் பராமரிப்பு தொடர்பாகவும் விளக்கிப் பேசினார். மேலும் பங்களிப்பு உத்திரவாத திட்டம், அதன் மூலம் விவசாயிகள் தங்களுக்குள்ளே குழு அமைத்து வயல்களை ஆய்வு செய்து படிவங்களை சமர்ப்பித்திட வேண்டும்" என்றார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நீ.சாந்தா ஷீலா, அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். நிறைவாக உதவி வேளாண் அலுவலர் து.சிவசுப்ரமணியன் நன்றி கூறினார்.

Tags

Next Story