பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், பேராவூரணி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட 8 குறுவள மைய பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பேராவூரணி வட்டாரம், கொன்றைக்காடு அரசு உயர் நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான நிறைவு நாள் பயிற்சியை, புதன்கிழமையன்று வட்டாரக கல்வி அலுவலர்கள் அ.அங்கயற்கண்ணி, கா.கலாராணி ஆகியோர் துவக்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ. முருகேசன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் (பொ) குமரேசன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், குழந்தைகள் உரிமைகள், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு துணை குழுக்கள் அமைப்பது மற்றும் அவர்களின் பணிகள் பற்றிக் கூறப்பட்டது. உறுப்பினர்கள் பள்ளியில் மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திலும், கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. குறுவள மையத்திற்கு உட்பட்ட 13 பள்ளிகளில் இருந்து பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், துணைத் தலைவர், தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் மற்றும் கல்வியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியின் கருத்தாளராக ஆசிரியர்பயிற்றுநர் அ.ரா.சரவணன் செயல்பட்டார்.
Next Story