ஊட்டியில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

ஊட்டியில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு வட்டாட்சியர் சங்கீதா ராணி தலைமையில் பயிற்சியளிக்கபட்டது. இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெறும் மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடி பணியாளர்களான ஆசிரியர்களுக்கு நாளை நடக்கும் பயிற்சி முகாமில் பயிற்சி அளிப்பார்கள். தேர்தல் விதிமுறைகளை கையாள்வது, மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களை கையாள்வது,

கட்சி முகவர்கள், வாக்காளர்களை முறைப்படுத்துவது குறித்த விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் குறித்த விபரங்களையும் அதற்கான வழித்தடங்களையும் அறிந்து இருக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், இருக்கைகள், மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளில் குறைபாடுகள் இருந்தால் மண்டல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

மண்டல அலுவலர்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மாறுதல் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். மேலும் வாக்குச்சாவடிகளில் கைபேசி மற்றும் தொலைபேசி இணைப்பு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். வாக்குச் சாவடிகளுக்கு அருகில் உள்ள தேர்தல் தொடர்பான அலுவலர்களின் தொலைபேசி எண் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் தொடர்பான இதர படிவங்கள் வந்து சேர்ந்து விட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளில் காவல் துறை துணை நிலை படையினர் வரப்பெற்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் பட்சத்தில் மாற்று மின்னணு வாக்கு பதிவு எந்திரம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியான முறையில் சீல் இடப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக, காவல் துறை பாதுகாப்புடன் வாக்குபதிவு இயந்திரங்களை சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் முறையாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story