மாணவிகளுக்கு அயோடின் பரிசோதனை குறித்த பயிற்சி

மாணவிகளுக்கு அயோடின் பரிசோதனை குறித்த பயிற்சி

மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் 

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் வேதியியல் துறை மாணவிகளுக்கு அயோடின் பரிசோதனை குறித்த பயிற்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நியூட்ரிசியன் இண்டர்நேஷனல் மற்றும் புனித மரியன்னை கல்லூரி ஆகியவை இணைந்து வேதியியல் துறை மாணவிகளுக்கு அயோடின் பரிசோதனை குறித்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினரும், எம்பவர் இந்தியா கௌரவ செயலாளருமான ஆ.சங்கர் சான்றிதழ்களை வழங்கினார்.

அவர் பேசும் போது உப்பு உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. இந்த பயிற்சியின் மூலம் கலந்து கொண்ட மாணவிகளுக்கு உப்பு தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு தூய மரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெஸி பர்ணான்டோ தலைமை தாங்கினார். பயிற்சியின் நோக்கம் குறித்து நியூட்ரிசியன் இண்டர்நேஷனல் உப்பு ஆலோசகர் சரவணன் விளக்கினார். மாரியப்பன் மற்றும் இராமமூர்த்தி ஆகியோர் அயோடின் பரிசோதனை குறித்து பயிற்சியளித்தார்கள். முன்னதாக வேதியியல் துறைத் தலைவர் முனைவர். சோபியா வரவேற்றார். துணைப் பேராசிரியை பர்வீன் சுல்தானா நன்றி கூறினார்.

Tags

Next Story