கரும்பு பயிர்களில் இயந்திரத்தில் களையெடுப்பு குறித்த பயிற்சி

கரும்பு பயிர்களில் இயந்திரத்தில் களையெடுப்பு குறித்த பயிற்சி

சாத்தணஞ்சேரி பகுதியில் விவசாயிகளுக்கு இயந்திரம் வாயிலாக கரும்பு பயிர்களில் களையெடுப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

சாத்தணஞ்சேரி பகுதியில் விவசாயிகளுக்கு இயந்திரம் வாயிலாக கரும்பு பயிர்களில் களையெடுப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக நெல் மற்றும் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில், சில ஆண்டுகளாக விவசாய பணிகள் மேற்கொள்ள கூலி ஆட்கள் தட்டுப்பாடு பிரச்னை தொடர்ந்து நிலவுகிறது. கிராமங்கள் தோறும் 100 நாள் வேலைக்கு ஆட்கள் சென்று விடுவதால், பயிர்கள் நடவு செய்தல், களை எடுத்தல் மற்றும் அறுவடை பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

இதனிடையே, நெற் பயிர் நடவு செய்ய, நெல் மற்றும் கரும்பு பயிர்கள் அறுவடை செய்ய இயந்திரம் கொண்டு வரப்பட்டு தற்போது அதன் வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கரும்பு மற்றும் நெல் பயிர்கள் சாகுபடி நிலங்களில், இயந்திரம் மூலம் களை எடுப்பு முறை சாத்தணஞ்சேரி, காவூர், சீட்டணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக சென்னை, ஜார்ஜ் மைஜோ என்கிற நிறுவனம் சார்பில், கிராமங்களில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து முகாம் நடத்தி அவ்வகையான இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சாத்தணஞ்சேரி பகுதியில் விவசாயிகளுக்கு இயந்திரம் வாயிலாக கரும்பு பயிர்களில் களையெடுப்பது குறித்த செயலாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

Tags

Next Story