திட்டக்குடியில் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து பயிற்சி
பயிற்சி பெற்ற மாணவிகள்
திட்டக்குடியில் உள்ள ஜெ.எஸ்.ஏ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் ஊரக வேளாண்மை களப்பணித் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மாணவிகள் எளம்பலூர் கிராமத்தில் உள்ள ஆறுமுகம் எனும் பாரம்பரிய நெல் விவசாயிடம் சுமார் 20 வகையான பாரம்பரிய நெல் குறித்தும் அதை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மை குறித்தும் கேட்டறிந்தனர்.
அவர் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பின்சார் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் அங்கக முறையில் விதைப்பது குறித்தும் தெளிவாக விளக்கினார். மேலும் அவருடைய அரிசி ஆலையில் உள்ள நெல் அரவை இயந்திரங்களைப் பார்வையிட்டு அவற்றை இயங்குவது குறித்தும் பயிற்சி அளித்தார்.
மேலும் மாணவிகள் அவரிடம் இருந்து நெல் ரகங்களின் மாதிரிகளை சேகரித்தனர். இதில் இறுதியாண்டு மாணவர்கள் கனிமொழி, கனிஷ்கா, கௌசல்யா, கிரிஷ்மா, லலிதா பஸ்ரீ மதுமிதா, மஹா, மீனா மீனாட்சி. மிருதுளா | ஆகியோர் பங்குபெற்றனர்