பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

புதுச்சத்திரத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுச்சத்திரத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சேந்தமங்கலம், டிச. 14 சேந்தமங்கலம் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 குறுவள மையங்களில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது. பயிற்சியை மேற்பார்வையாளர் மகேஷ்வரி துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரசேகரன், சுப்பிரமணியன் ஆகியோர் மையங்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

பயிற்சியில் பள்ளி மேலாண்மைக் குழு கட்டமைப்பு, துணைக்குழுக்கள், பெற்றோர் செயலி, மாதாந்திர பள்ளி மேம்பாட்டுத் திட்டம், பள்ளிக்கல்வி துறையின் முன் முயற்சிகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், துணைத் தலைவர், தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் தினேஷ்குமார், கௌரிசங்கர் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு, பள்ளியின் முன்னேற்றத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர். புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 77 பள்ளிகளில் இருந்து 349 உறுப்பினர்கள் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்தனர்.

Tags

Next Story