பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தில் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணையம் தலைப்பில் நடைபெற்றது. இப்பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வ வெங்கடேஷ் வரவேற்பு வழங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜன் தலைமையேற்று ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவரித்தார். மேலும் விவசாயிகளின்சந்தேகங்களுக்கு பதிலளித்தார். வேளாண்மை அலுவலர் மதன்குமார் அரசு மானிய திட்டம் குறித்து பேசினார். மேலும் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவரித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் வினோத் குமார் நன்றி தெரிவித்தார். இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பாபு, ராமு, ராஜ்குமார், கங்கா, மாசிலாமணி, ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பெரணமல்லூர் வட்டாரத்தை சார்ந்த 20க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ளும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story