தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் பயிற்சி பட்டறை

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் பயிற்சி பட்டறை

பயிற்சி பட்டறை

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் "ஆர்-ஸ்டுடியோ மற்றும் அமாஸ் மென்பொருளைப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு” என்ற இரண்டு நாள் பணிபட்டறை பயிற்சி நடைபெற்றது. 
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில், 19 மற்றும் 20 மார்ச் 2024 வரை "ஆர்-ஸ்டுடியோ மற்றும் அமாஸ் மென்பொருளைப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பணிபட்டறை நடத்தப்பட்டது. பட்டறையின் நோக்கம் ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அடிப்படை புள்ளியியல் பகுப்பாய்வு அறிவை வழங்குவதாகும். ஆர்-ஸ்டுடியோ மற்றும் அமாஸ் மென்பொருளைப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வை பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் ப.அகிலன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பயிலரங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த இரண்டு நாள் பயிலரங்கில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வளவிரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவிப் பேராசிரியர்கள் பூ.மணிகண்டன், வெ.கோமதி மற்றும் இ.சந்தனக்குமார் ஆகியோர் பயிற்சி வகுப்புகளை எடுத்தனர். தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற கல்லூரிகளிருந்து மொத்தம் 47 பங்கேற்பாளர்கள் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் நிறைவு விழா நிகழ்ச்சியின்போது பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் ;உதவிப் பேராசிரியரும் அமைப்புச் செயலாளருமான பூ.மணிகண்டன் நன்றியுரை வழங்கினார். மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ந.வ.சுஜாத்குமார் பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தார்.

Tags

Next Story