காலநிலை மாற்றம் குறித்து பயிற்சி பயிலரங்கம்

காலநிலை மாற்றம் குறித்து பயிற்சி பயிலரங்கம்
பயிலரங்கம்
கள்ளக்குறிச்சியில் காலநிலை மாற்றம் குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி பயிலரங்கம் நடந்தது.

கள்ளக்குறிச்சியில் வனத்துறை சார்பில் நடந்த பயிற்சி பயிலரங்கத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் தலைமை தாங்கினர்.கூட்டத்தில், காலநிலை மாற்றம் மற்றும் முதல்வரின் தொலைநோக்கு பார்வை, அரசு செயல்படுத்தும் திட்டங்களை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு செயல்படுத்தும் விதம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈர நிலை இயக்கத்தின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, காலநிலை மாற்றம் மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து பூவுலகின் நண்பர்கள் பிரதிநிதி வெற்றிச்செல்வனும், காலநிலை அரங்கு குறித்து அருண்பாண்டியன், பவித்ரபிரியா, நன்னிலம் சுற்றுச்சூழல் கிராமம் குறித்து சபரீஷ் அய்யப்பன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார், முதல்வரின் பசுமை பெல்லோ திட்ட பூபதிராஜா உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், 15 தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story