காஞ்சிபுரம் சரகத்தில் 15 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

காஞ்சிபுரம் சரகத்தில்  15 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

டிஐஜி பொன்னி

காஞ்சிபுரம் காவல் சரகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இந்த மூன்று மாவட்டங்களிலும் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள், துறை ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் காவலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் சரக காவல் டிஐஜி பொன்னி இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள 15 காவல் ஆய்வாளர்களை இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். அவ்வகையில் பிரேம் ஆனந்த் சைபர் கிரைம் பிரிவிற்கும், சைபர் கிரைமில் பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கும், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அண்ணாதுரை சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கும், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆய்வாளர் சித்ராதேவி ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வி ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், அதேபோல் கும்முடிபூண்டி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்செல்வி, மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கும், செங்கல்பட்டு மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த விஜயலட்சுமி , காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். சத்தியவாணி, படாளம் காவல் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட குற்ற பிரிவிற்கும், சத்தியமாமா ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து படாளம் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர். மொத்தம் 15 காவல் ஆய்வாளர்கள் ஒரே நாளில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story