ஏரல் தாசில்தார் பணி இடமாற்றம் - ஆட்சியர் உத்தரவு

ஏரல் தாசில்தார் பணி இடமாற்றம் - ஆட்சியர் உத்தரவு

வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யாததால் ஏரல் தாசில்தார் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யாததால் ஏரல் தாசில்தார் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் கைலாச குமாரசாமி. தாமிரபரணி கரையோரத்தில் இருக்கும் ஏரலில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டன. இந்நிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஏரல் வட்டாட்சியரால் மழை வெள்ள நிவாரண பணிகளை முறையாக கவனிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேற்று பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார் . அவருக்கு பதிலாக திருச்செந்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஏரல் புதிய வட்டாட்சியராக நியமிக்கபட்டுள்ளார். கைலாச குமாரசாமிக்கு புதிய பணியிடம் வழங்கப்படவில்லை.

Tags

Next Story