பல்வேறு புகாரில் சிக்கிய கெங்கவல்லி ஜி.ஹெச் பணியாளர் இடமாற்றம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அரசு மருத்துவமனை 30 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் சுமார் 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் பல்நோக்கு தூய்மை மருத்துவப் பணியாளராக நளினி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. மேலும், இவர் சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, சேலம் மாவட்ட சுகாதார இணை இயக்குன பானுமதிக்கு புகார் வந்தது.
இதையடுத்து, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பல்நோக்கு தூய்மை மருத்துவப் பணியாளர் நளினி, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது குறித்து சேலம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் பானுமதி கூறுகையில், 'தொடர்ந்து நளினி மீது புகார் வந்த நிலையில், வைரலாக வீடியோ ஒன்று இணையதளத்தில் வந்துள்ளது. இது குறித்து அவரை பணி முகமை மாற்றம் செய்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.