நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

 நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 12 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா உத்தரவிட்டுள்ளார். 

நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 12 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரு மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் சரகத்திற்கு உட்பட்ட நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 12 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கும், கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், தர்மபுரி மாவட்டம் கடத்தூர் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், குருபரப்பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சுகுமார், கடத்தூருக்கும், திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், பாகலூருக்கும், திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டராகவும், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கும், திருச்செங்கோடு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, ராயக்கோட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாநகர காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சிவகாமி, கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய நாகலட்சுமி, போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags

Next Story