சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இடமாற்றம்
சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இடமாற்றம்
சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வந்தவர் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வந்தவர் குப்புசாமி. இவர் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக பணியாற்றி வந்த தனஞ்செயன், சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று அவர் சந்தியூரில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்று கொண்டார்.
Next Story