அல்லிநகரத்தில் திருநங்கைகளின் விழிப்புணர்வு பேரணி

அல்லிநகரத்தில் திருநங்கைகளின் விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

அல்லிநகரத்தில் 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருநங்கைகளின் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி வள்ளி நகர்பகுதியில் வசித்துவரும் திருநங்கைகளிடம், பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் இன்று (22.03.2024) நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை பொதுத்தேர்தல்-2024 அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேனி மாவட்டத்தில் அனைவரும் வாக்களித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம், உறுதிமொழி எற்பு, கிராமிய நடனம், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம்,

வாக்களிப்பதின் கடமை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று ஒரு வாக்காளர்களும் விடுபட்டுவிட கூடாது என்பதற்காக மூன்றாம் பாலின வாக்காளர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வள்ளி நகர் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருநங்கைகள் அனைவரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காண்பித்து, 100% வாக்களிப்போம் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, கலந்து கொண்டார்.

மேலும், வாக்களிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சாலையோர சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார்.

Tags

Next Story